
லண்டன் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்த்தில் பணியாற்றிய நிலையில் கடந்த வருடம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து கழுத்தறுக்கப்படும் என எச்சரித்த பிரிகேடியர் இந்துனில் பெர்னான்டோவுக்கு அங்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டும் அது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு தடவைகள் நீதிமற்ற அழைப்பாணை புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் வெஸ்ட்மினிஸ்டர் மஜிஸ்திரேட் நீதிமன்றம் எதிர்வரும் வாரம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்து சுதந்திரத்தை மதிக்கத் தவறியதாக பெர்னான்டோ மீது குற்றச்சாட்டுகள் ஒரு பக்கமும், புலி ஆதரவாளர்களை எதிர்த்ததாக பாராட்டுக்கள் இன்னொரு பக்கமும் அக்காலப் பகுதியில் தெரிவிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment