வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நிமித்தம் 10 லொறிகளில் கொழும்பிலிருந்து சதொச நிறுவனத்தினால் கொண்டு செல்லப்பட்ட பொருட்களை அரசாங்க அதிபர் முழுமையாகக் கொள்வனவு செய்ய மறுத்துள்ளதாக சதொச தலைவர் தெரிவிக்கிறார்.
சதொச பொருட்கள் மக்களை சென்றடையவில்லையெனும் குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாக ரிசாத் பதியுதீனின் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த தகவலில், அரசாங்க அதிபர் சதொசயிலிருந்து பருப்பை மாத்திரம் கொள்வனவு செய்து விட்டு அரிசி, மா, சீனி, கடலை உட்பட முக்கிய பொருட்களை பல நோக்கு கூட்டுறவு சங்கத்திடமிருந்தே கொள்வனவு செய்துள்ளதாகவும் நிராகரிக்கப்பட்ட பொருட்கள் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவை கொழும்புக்குத் திருப்பிக் கொண்டுவரப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபர் குறித்த பொருட்களை 'கொள்வனவு' செய்தே மக்களுக்கு விநியோகித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment