புதிய அரசியலமைப்பொன்று உருவவாவது தொடர்பில் இனவாத சக்திகளுக்கே அச்சம் நிலவுவதாகவும் இப்பின்னணியில் போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவது அத்தனை இலகுவான காரியமில்லையெனவும் அதற்கு நீண்ட செயற்பாடுகள் தேவைப்படுவதாகவும் நாடாளுமன்றம், மாகாண சபைகள் என பல இடங்களில் இது குறித்து விவாதிக்கப்படும் எனவும் ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு, வர்த்தமானி வெளியிட வேண்டும் எனும் சூழ்நிலையும் இருக்க புதிய அரசியலமைப்பு மூலம் நாட்டைப் பிரிக்கப் பார்ப்பதாக இனவாத சக்திகள் கூக்குரலிடுவதாக அநுர மேலும் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க புதிய அரசியலமைப்பு அவசியப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பெப்ரவரி மாதம் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment