மஹிந்தவின் முடிவிலேயே எதிர்கால ஆதரவு: இளைஞர் பெரமுன! - sonakar.com

Post Top Ad

Thursday, 17 January 2019

மஹிந்தவின் முடிவிலேயே எதிர்கால ஆதரவு: இளைஞர் பெரமுன!


ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ச சரியான முடிவை எடுக்கத் தவறினால் எதிர்காலம் பற்றி மீளாய்வு செய்யப் போவதாக தெரிவிக்கிறது சிங்கள தேசியவாத கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் பிரிவு.தமது கட்சி சிங்கள தேசிய வாத கட்சியென சிங்கள மக்களிடத்தில் தெரிவிக்கும் மஹிந்த தரப்பு, அதே கட்சிக்கு முஸ்லிம் பெரமுன, தமிழ் பெரமுன என பிரிவுகளை உருவாக்கி சிறுபான்மையினங்களின் ஆதரவைப் பெற முயன்று வருகிறது.

எனினும், கட்சியின் பிரதான கொள்கை இவ்வாறே பிரஸ்தாபிக்கப்படுகின்ற நிலையில், மஹிந்த யாரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப் போகிறார் எனும் எதிர்பார்ப்பு நிலவுகின்றமையும் கடந்த ஒக்டோபர்  முதல் நண்பனான மைத்ரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment