பிரிகேடியரை லண்டன் அனுப்ப மாட்டோம்: இராணுவம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 January 2019

பிரிகேடியரை லண்டன் அனுப்ப மாட்டோம்: இராணுவம்!


லண்டன், வெஸ்ட்டமின்ஸ்டர் நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை அங்குள்ள நீதிமன்றில் ஆஜர்படுத்தப் போவதில்லையென தெரிவிக்கிறது இலங்கை இராணுவம்.அவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சூடாக அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்ததாக வழக்குத் தொடுனர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இராணுவம் அதனை மறுத்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் வெஸ்ட்மின்ஸ்டர் மஜிஸ்திரேட் கழுத்தறுப்பு அச்சுறுத்தல் விவகாரத்தில் பெர்னான்டோவை குற்றவாளியாகக் கண்டுள்ளது.

பெர்னான்டோ நீதிமன்றில் ஆஜராகத் தவறின், லண்டனில் இயங்கும் இலங்கைத் தூதர் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்கும் சூழ்நிலை உருவாகும் என சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment