
ரணில் விக்கிரமசிங்க தரப்பு புதிய அரசியலமைப்பு எனும் விடயத்தை வைத்து மக்களைக் குழப்பியடிப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
ஒரு கட்டத்தில் அரசியலமைப்பு என்கிறார்கள், பின்னர் அது வெறும் நகல் என்கிறார்கள், பிரேரணையொன்று இன்னும் முன்வைக்கப்படவில்லையென்கிறார்கள். எவ்வாறாயினும், மக்களைக் குழப்பும் இச்சக்திகளை இலங்கையின் அனைத்து இன மக்களும் சேர்ந்து தோற்கடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

கொல்லுபிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இன்று இடம்பெற்ற 'OPEN DAY' நிகழ்வில் கலந்து கொள்ள அங்கு விஜயம் செய்த நிலையில், அங்கு உரையாற்றுகையிலேயே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளமையும் நிகழ்வில் வைத்து மஹிந்தவுக்கு அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
No comments:
Post a Comment