ரோம்: இலங்கைத் தம்பதிக்குப் பிறந்த இவ்வாண்டின் முதற்குழந்தை! - sonakar.com

Post Top Ad

Thursday, 3 January 2019

ரோம்: இலங்கைத் தம்பதிக்குப் பிறந்த இவ்வாண்டின் முதற்குழந்தை!


இத்தாலி, ரோம் நகரில் இவ்வாண்டில் பிறந்த முதற்குழந்தை இலங்கைத் தம்பதியருக்குப் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


2019 ஜனவரி முதலாம் திகதி 00.00.10 (புது வருடம் பிறந்து 10 செக்கன்) மணியளவில் இக்குழந்தை பிறந்துள்ள நிலையில் ரோம் நகரின் மேயர் வெர்ஜினியா ரெஜி நேரில் சென்று பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரசாத் பண்டார, மதுபாசினி யாப்பா தம்பதியர் இத்தாலியை கௌரவப்படுத்தும் வகையில் தமது குழந்தைக்கு இத்தாலோ பண்டார என பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment