கோத்தாவை பார்த்தாலே 'பயம்': ரஞ்சன்! - sonakar.com

Post Top Ad

Thursday, 24 January 2019

கோத்தாவை பார்த்தாலே 'பயம்': ரஞ்சன்!


கோத்தபாய ராஜபக்ச என்றாலே வெள்ளைவேன், கொலைக் கலாச்சாரம் ஞாபகத்துக்கு வந்து அச்சம் மேலோங்குவதாக தெரிவிக்கின்ற ரஞ்சன் ராமநாயக்க, அவருக்கு புனர்வாழ்வளித்தால் ஓரளவுக்கு நம்ப முயற்சிக்கலாம் என தெரிவிக்கிறார்.



எந்தவொரு கேள்விக்கும் கோத்தபாய சொல்லும் பதில்கள் அச்சமூட்டுபவையாகவே இருப்பதாகவும் அவரது அமெரிக்க குடியுரிமையைப் பற்றிக் கேட்டாலே அச்சுறுத்தும் வகையில் சிரிப்பதாகவும் ரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோத்தபாயவுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் எனவும், அதன் பின் அவர் மீதான அச்சம் குறையலாம் எனவும் ரஞ்சன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment