
கண்டி நகரை அழகு படுத்தும் திட்டத்துக்கமைவாக நகரில் அனுமதிக்கப்படாத இடங்களில் சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள், பனர்களை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இப்பின்னணியில் மாகாண ஆளுனர் மைத்ரி குணரத்ன நேரடியாக களமிறங்கி சுவரொட்டி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுடிருந்தார். இதேவேளை மேல் மாகாணத்தில் இப்பணிகள் மூன்று வாரங்களுக்குள் நிறைவு பெறும் வகையில் மாநகர சபையூடாக செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி தெரிவித்தார்.
சுதந்திர தின கொண்டாட்டம் நெருக்குகின்ற நிலையில் முக்கிய நகரங்களை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment