நவம்பருக்குள் மா.ச தேர்தல்; இல்லாவிட்டால் இராஜினாமா: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Monday, 28 January 2019

நவம்பருக்குள் மா.ச தேர்தல்; இல்லாவிட்டால் இராஜினாமா: தேசப்பிரிய


நவம்பர் 10ம் திகதிக்குள் மாகாண சபை தேர்தல்களை நடாத்தாவிட்டால் தான் இராஜினாமா செய்யப் போவதாக தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.


உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் போன்றே மாகாண சபை தேர்தல்களும் எல்லை நிர்ணயத்தை காரணங்காட்டி தள்ளி வைக்கப்படுகின்ற நிலையில் தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீண்ட இழுபறியின் பின் கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கம் பாரிய பின்னடைவை சந்தித்திருந்தமையும் ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் பின் இவ்வருடம் தேர்தல் ஒன்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment