முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Sunday, 13 January 2019

முதலில் மாகாண சபைகளுக்கான தேர்தல்: மைத்ரி!


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மாகாண சபைத் தேர்தல் நடக்கும் சாத்தியமிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடக்கப் போவதாகவும் அதற்குத் தயாராகும்படியும் தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபாலி சிறிசேன.ஸ்ரீலசுகட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் தான் ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழுவுடன் இது பற்றிக் கலந்துரையாடிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய சர்ச்சைகள் தீர்வதற்கு இன்னும் தாமதமாகும் என்பதால் அதற்கு முன் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் சாத்தியமே அதிகம் என ஐ.தே.க தரப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment