விடுதலை கோரி ஞானசார ஜனாதிபதிக்கு நேரடிக் கடிதம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 22 January 2019

விடுதலை கோரி ஞானசார ஜனாதிபதிக்கு நேரடிக் கடிதம்!


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படும் ஞானசாரவுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அவரே நேரடியாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.


உச்ச நீதிமன்றில் தான் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தொடர்வதற்கு தடையாக இருந்த நீதிபதிகளுள் ஒருவர் தன் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வுள்ளவர் எனவும் தனது கடிதத்தில் தெரிவிக்கின்ற ஞானசார, தன்னை ஜனாதிபதி விடுவிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இலங்கையில் இனவெறியைத் தூண்டி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கெதிரான இனவன்முறைகள் உருவாகக் காரணமாக இருநத ஞானசார, ஹோமாகம நீதிமன்றுக்குள் அடாவடித்தனமாக புகுந்து சாட்சியையும் மிரட்டியிருந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment