ல.ஊ.ஆ தொடர்ந்த வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் விடுதலை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 January 2019

ல.ஊ.ஆ தொடர்ந்த வழக்கிலிருந்து ஜோன்ஸ்டன் விடுதலை!


2010 - 2014 வரையான தனது சொத்து விபரத்தை வெளியிடத் தவறியதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்றில் வன்முறையுடன் நடந்து கொண்டவருமான ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் முன் வைக்கப்படவில்லையென தெரிவித்து வழக்கிலிருந்து அவரை விடுவித்துள்ளது.

இந்நிலையில், அரசியல் பழிவாங்கலுக்காகவே தன் மீது வழக்குத் தொடரப்பட்டதாக ஜோன்ஸ்டன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment