ஊதிக் கெடுக்கப்பட்டதா கிரான்ட்பாஸ் 'சுலைமான்' விவகாரம்? - sonakar.com

Post Top Ad

Thursday, 24 January 2019

ஊதிக் கெடுக்கப்பட்டதா கிரான்ட்பாஸ் 'சுலைமான்' விவகாரம்?


சில காலமாக மூடப்பட்டிருக்கும் கிரான்ட்பாஸ் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த காணி தொடர்பில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாரிய அளவில் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தது.

எனினும், குறித்த காணி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் முறைகேடாகப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பரவிய தகவல் மூலம் வக்பு செய்யப்பட்டுள்ள இக்காணி மூலம் மீண்டும் கபூரியா நிதியத்துக்கு வருவாய் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் நலன்விரும்பிகள் அங்கலாய்க்கின்றனர்.இவ்விடத்தை குத்தகைக்கு எடுப்பதன் மூலம் தகுந்த வாடகை வழங்குவதற்கு ஆடை நிறுவனம் ஒன்று முன் வந்திருந்ததாகவும், தற்போது சமூக மத்தியில் மேற்கொள்ளப்படும் தவறான பிரச்சாரங்களால் நல்ல நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து குறித்த ஆடை தயாரிப்பு நிறுவனம் பின் வாங்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.


சுலைமான் வைத்தியசாலை மூடப்பட்டதையடுத்து அங்கு பணியாற்றிய வைத்தியர்கள் பலர் தற்போது கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தனியார் மருத்துவ நிலையம் ஒன்றில் 'சனல்' சேவை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பெறுமதி மிக்க இக்காணியூடாக பெறக்கூடிய வருமானம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாகவும் போட்டி அமைப்புகளே இவ்வாறு பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment