இராணுவத்தை ஏமாற்றிய குற்றத்தை ஒப்புக் கொள்ளும் நாமல் குமார! - sonakar.com

Post Top Ad

Friday, 4 January 2019

இராணுவத்தை ஏமாற்றிய குற்றத்தை ஒப்புக் கொள்ளும் நாமல் குமார!


தான் இராணுவத்தில் சேர்வதற்கு போலி சான்றிதழ்களை வழங்கியிருந்தமை உண்மையென ஒப்புக்கொள்வதாகவும் அதற்காக நீதிமன்றம் விதிக்கும் எந்தத் தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் தெரிவிக்கிறார் பொலிஸ் உளவாளி நாமல் குமார.எனினும், அதற்காக, ஜனாதிபதி கொலைத் திட்ட விவகாரத்தை மூடி மறைக்க விடப் போவதில்லையெனவும் அது தொடர்பில் தான் வெளியிட்ட விபரங்கள் உண்மையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

நாமல் குமாரவின் தகவலின் பின்னணியில் குழப்ப நிலையை அடைந்திருந்த ஜனாதிபதி ஒக்டோபரில் அவசர முடிவுகளை எடுத்து நீதிமன்ற தலையீட்டின் பின்னணியில் மீளவும் ஐக்கிய தேசியக் கட்சி அரசை அனுமதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment