மேலும் சிக்கலில் மாவனல்லை - புத்தளம் விவகாரம்: அதிகரிக்கும் சாட்சியங்கள்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 January 2019

மேலும் சிக்கலில் மாவனல்லை - புத்தளம் விவகாரம்: அதிகரிக்கும் சாட்சியங்கள்!


மாவனல்லை புத்தர் சிலை உடைப்பின் பின்னணியில் அங்கு ஏழு பேரும் புத்தளத்தில் நால்வரும் முன்னர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் பலருடைய பெயர்ப் பட்டியல் வெளியாகியிருந்தது. இதன் பின்னணியில் தற்போது 15 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் புத்தளத்தில் வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்டமை மற்றும் அவற்றைக் கொண்டு குண்டுகளைத் தயாரிக்க முயற்சித்தமை தொடர்பிலும் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.குறித்த முஸ்லிம் இளைஞர் குழு இலங்கையில் இன மோதல் ஒன்றை உருவாக்குவதன் அடிப்படையிலேயே செயற்பட்டதாக பொலிஸ் தரப்பு இன்றும் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் குண்டு தயாரிக்கும் விளக்கங்களும் உள்ளடக்கம் எனவும் தற்போது தலைமறைவாகவுள்ள பிரதான சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment