தாயகம் திரும்பும் மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 January 2019

தாயகம் திரும்பும் மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்


கடந்த 25ம் திகதி மாலியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவரினதும் உடல்கள் எதிhவரும் 2ம் திகதி தாய்நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தாக்குதலில் மேஜர் ஜயவிக்ரம மற்றும் செரசன் விஜேகுமார ஆகிய இருவர் உயிரிழந்துள்ள அதேவேளை மேலும் சிலர் காயமுற்றுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாலியில் ஐ.நா அமைதி காக்கும் பணியில் இலங்கை இராணுவம் பல்வேறு பங்களிப்பை செய்து வருகின்ற நிலையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளமையும் ஐ.நா பொதுச் செயலாளர் இதனைக் கண்டித்துள்ளதுடன் யுத்த குற்றம் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment