மஹிந்த ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வருவார் எனவும் அதுவே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பாதுகாப்பு எனவும் தெரிவிக்கிறார் தீவிர மஹிந்த ஆதரவாளரான நா.உ ரொசான் ரணசிங்க.
2020 ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மைத்ரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என அண்மையில் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்ததற்கு பதிலளிக்கு முகமாகவே இவ்வாறு தெரிவித்துள்ள ரொசான், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரமுன 47 வீத வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் ஸ்ரீலசுக 14 வீத வாக்குகளையே பெற முடிந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தனது அரசியல் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்தும் முகமாகவும் ஒக்டோபர் அரசியல் பிரளயத்தினால் ஏற்பட்ட அவப்பெயரை சரிக்கட்டவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment