ஹிஸ்புல்லா 'விட்ட' இடத்துக்கு சாந்த பண்டார: வர்த்தமானி வெளியீடு! - sonakar.com

Post Top Ad

Monday, 7 January 2019

ஹிஸ்புல்லா 'விட்ட' இடத்துக்கு சாந்த பண்டார: வர்த்தமானி வெளியீடு!


ஆளுனர் பதவியைப் பெற்றுக் கொண்டு ஹிஸ்புல்லா கை விட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சாந்த பண்டாரவுக்கு வழங்கியுள்ளதை உறுதி செய்யும் விதமாக வர்த்தமானி வெளியாகியுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் சாந்த பண்டாரவே அப்பதவிக்கு நியமிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் வர்த்தமானி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்த ஹிஸ்புல்லா அண்மையில் ஆளுனர் பதவியைப் பெறுவதற்காக இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment