போதைப்பொருள் வர்த்தகம்: அரசியல்வாதிகளுக்கு 'தொடர்பு': ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Friday, 25 January 2019

போதைப்பொருள் வர்த்தகம்: அரசியல்வாதிகளுக்கு 'தொடர்பு': ஹர்ஷ


நாட்டில் நடக்கும் போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு நேரடி தொடர்பிருப்பதாக தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா.


உள்ளூர் அரசியல்வாதிகளின் தொடர்புடனேயே அனைத்து போதைப் பொருள் விநியோக நடவடிக்கைகளும் இடம்பெறுகிறது என தெரிவித்துள்ள அவர், இது பற்றி பேசாத வரை அதனை நிறுத்த முடியாது எனவும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்.

போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் ஒரு சிலர் நாடாளுமன்றிலும் அங்கம் வகிக்கின்றமையும் தினசரி பெருந்தொகை போதைப்பொருள் கைப்பற்றப்படும் அளவுக்கு இலங்கையில் அதற்கான கிராக்கி உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment