மஹிந்த - மைத்ரியின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடுவேன்: கோத்தா! - sonakar.com

Post Top Ad

Thursday 31 January 2019

மஹிந்த - மைத்ரியின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடுவேன்: கோத்தா!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் மஹிந்த மற்றும் மைத்ரிபால சிறிசேனவின் ஆசீர்வாதத்துடன் போட்டியிடத் தயாராகியுள்ளதாக தெரிவிக்கிறார் கோத்தபாய ராஜபக்ச.இருவரும் தம்மை அங்கீகரித்துள்ளதாகவே நம்பிக்கை வெளியிட்டுள்ள கோத்தா, உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடவுள்ளதாகவும் தெரிவித்து வருகிறார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியுற்றதும் பசில் ராஜபக்சவும் மனைவியும் இரவோடிரவாக அமெரிக்க சென்றிருந்தமையும் மனைவி அங்கேயே தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment