நாட்டில் முஸ்லிம்கள் எதிநோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடனான விசேட சந்திப்பொன்றில் கலந்துரையாடியுள்ளனர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகள்.
மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஜம்மியா தலைவர் ரிஸ்வி முப்தி உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் போது இனவாத சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளதுடன் தகுந்த நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் ஜம்மியாவின் பூரண ஒத்துழைப்புக்கான உறுதிமொழியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment