பதில் அதிபர்களுக்கு ரூ.3000 ஊக்குவிப்பு தொகை: ஆளுனர் அசாத் அனுமதி! - sonakar.com

Post Top Ad

Friday 18 January 2019

பதில் அதிபர்களுக்கு ரூ.3000 ஊக்குவிப்பு தொகை: ஆளுனர் அசாத் அனுமதி!


பதில் அதிபர்களுக்கு மாதாந்தம் ரூ.3000 ஊக்கத் தொகை வழங்க அனுமதியளித்துள்ளார் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.



அதிபர் தரத்திலுள்ளவர்களுக்கு மட்டுமே முன்னர் இவ்வாறான கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 350 பதில் அதிபர்கள் இதன் மூலம் பயனடையவுள்ளதாக ஆளுனரின் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நடவடிக்கை மூலம் பதில் அதிபர்கள் மாத்திரமல்லாது மாணவர்களும் பயனடைவர் என ஆளுனர் அசாத் சாலியின் செயலாளர் பி.சோமசிறி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-R.Deen

No comments:

Post a Comment