2014ம் ஆண்டு 3000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸடபிள் ஒருவருக்கு 20,000 ரூபா அபராதமும் 8 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது உயர் நீதிமன்றம்.
குறித்த நபர் மீது நான்கு குற்றச்சாட்டுகளடங்கிய வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சட்டநடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட சாரதியொருவரிடமிருந்து குறித்த நபர் லஞ்சம் பெற்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment