ஐக்கிய தேசியக் கட்சி அடக்குமுறையூடாக தமக்குத் தேவையான விடயங்களை சாதிக்க முனைவதாக தெரிவிக்கிறார் மஹிந்த அணியின் பிரசன்ன ரணதுங்க.
கருப்பு ஊடகங்களை தான் அடையாளப்படுத்தப் போவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையானது ஊடக அடக்குமுறையெனவும் அதன் ஊடாக ஊடகங்களை மௌனிக்கச் செய்து, மக்கள் அபிப்பிராயத்தைத் தமக்கு சாதகமாக திசை திருப்பிக் கொள்வதே நோக்கம் எனவும் பிரசன்ன மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, அரச ஊடகங்கள், சட்ட - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழே இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment