ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அதிருப்தி அணி அவரது கட்சி உறுப்புரிமை விவகாரத்தை நீதிமன்றுக்கு எடுத்து செல்வது தொடர்பில் ஆராய்ந்து வருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்த போதிலும், மஹிந்த ராஜபக்ச தொடர்பில் நடவடிக்கை எடுக்க மறுத்து வரும் கட்சி நிர்வாகம், அரசுடன் இணையும் சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக நடவடிக்கையெடுக்கப் போவதாக தெரிவிக்கிறது.
இந்நிலையில், 21 சு.க உறுப்பினர்கள் ஐ.தே.மு அரசுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடாத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment