கட்சித் தலைமையகம் மூடப்படவில்லை: SLFP மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 27 December 2018

கட்சித் தலைமையகம் மூடப்படவில்லை: SLFP மறுப்பு!


ஜனாதிபதி குடும்பத்துடன் விடுமுறையில் சென்றுள்ள நிலையில் கட்சித் தலைமையகம் மூடப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையுமில்லையென தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச.


இதேவேளை, விடுமுறைக்காலம் என்பதாலும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருப்பதாலும் கட்சித் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ பணிகள் எதுவும் இடம்பெறவில்லையெனவும் மீண்டும் ஜனவரி 1ம் திகதி 'சுப நேரத்தில்' தலைமையகம் இயங்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையிலேயே ஜனாதிபதி நாடு திரும்பும் வரை கட்சித் தலைமையகம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment