அரசைக் கவிழ்க்கும் முயற்சி தொடரும்: SB சூளுரை - sonakar.com

Post Top Ad

Saturday, 29 December 2018

அரசைக் கவிழ்க்கும் முயற்சி தொடரும்: SB சூளுரை2015 முதல் அரசைக் கவிழ்ப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்த மஹிந்த அணி, கடந்த ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் தற்காலிக வெற்றி கண்டிருந்தது.

எனினும், நீதிமன்ற தலையீட்டில் ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமாகக் காணப்பட்டதால் மீண்டும் ஐ.தே.க தற்போது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.எனினும், தற்போது பதவிப் பகிர்வில் முரண்பாடுகள் நிலவும் நிலையில் மீண்டும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்றில் தேர்தலில் அல்லது நாடாளுமன்றில் இவ்வாட்சியைக் கவிழ்ப்பது உறுதியென எஸ்.பி. திசாநாயக்க சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment