யாழ்: ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday 27 December 2018

யாழ்: ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது



யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில்  (Browns ice) எனப்படும் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இன்று (27)  பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் 85g  Browns ice  எனப்படும் அதி சக்தி வாய்ந்த போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக இப் போதைப்பொருள் கைதான சம்பவம் இதுவேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment