நாட்டில் மீண்டும் இன மத பிரிவினைகளைத் தூண்டும் சக்திகள் தலையெடுப்பதாகவும் அதனை முறியடித்து நாட்டை ஒற்றுமையுடன் கட்டியெழுப்ப வேண்டிய கால கட்டம் இதுவெனவும் தெரிவிக்கிறார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
சபாநாயகரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற அனைத்து மத தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விசேட சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், அரசியல் காரணங்களுக்காக மதஸ்தலங்களிலிருந்து இனவாதத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மாவனல்லையில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்புகளையடுத்து ஆங்காங்கு இனவாத கோசங்கள் தலையெடுத்த அதேவேளை இராவணா பலய அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றிருந்தது. எனினும் தொடர்ந்தும் பொலிசார் இவ்விடயத்தில் சிரத்தையுடன் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment