யாழ்: குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 27 December 2018

யாழ்: குளத்தில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு


குளத்தில்  நீராடச் சென்ற குடும்பத்தலைவர் ஒருவர்  நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மணியந்தோட்டம் பகுதியில் நேற்று(26)    சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த பகுதியை சேர்ந்த    மூன்று பிள்ளைகளின் தந்தையான இராசன் குலேந்திரன் (வயது-34) என்பவர் ஆவார்.

உயிரிழந்த  குடும்பத்தலைவர்  குளத்தில் நீராடச். அவரைக் காணவில்லை என உறவினர்கள் நேற்றிரவு தேடியுள்ளனர். இந்த நிலையில் அவர்  நண்பகல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment