ஜனவரியில் முக்கிய அமைச்சுப் பொறுப்பு கிடைக்கும்: ரங்கே பண்டார நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Saturday, 29 December 2018

ஜனவரியில் முக்கிய அமைச்சுப் பொறுப்பு கிடைக்கும்: ரங்கே பண்டார நம்பிக்கை!


கட்சியையம், ஜனநாயகத்தையும் காப்பாற்றத் தியாகம் செய்த தன்னைப் புறக்கணித்ததாகவும் விரைவில் தான் தீர்மானம் ஒன்றுக்கு வர  நேரிடும் எனவும் அச்சுறுத்தல் விடுத்திருந்த பாலித ரங்கே பண்டார, தனக்கு முக்கிய அமைச்சுப் பதவியொன்று கிடைக்கவுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


தனது பிரேதசத்துக்கும், அதேவேளை நாட்டுக்கும் சேவை செய்யக்கூடிய வகையிலான அமைச்சுப் பொறுப்பொன்ற கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானியில் அமைச்சுப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ள அதேவேளை மேலும் சில அமைச்சு நியமனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment