எதிர்வரும் ஏப்ரல் அளவில் பொதுத் தேர்தல் நடாத்தப்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நவின் திசாநயக்க தெரிவித்திருந்த கருத்துக்கு சஜித் மற்றும் மங்கள உட்பட்ட சிலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
நாடாளுமன்றின் பதவிக்காலம் ஆகக்குறைந்தது ஒன்றரை வருடங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் அவசரமாக தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டிய அவசியமில்லையென ரணில் விக்கிரமசிங்கவிடம் தமது எதிர்ப்பைப் நேந்றைய தினம் பதிவு செய்துள்ளனர்.
ஒக்டோபர் 26க்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சி மீது ஏற்பட்டுள்ள அனுதாபம் மற்றும் மஹிந்த - மைத்ரி தரப்பு மீது ஏற்பட்டுள்ள விரோதத்தைப் பயன்படுத்தி முன் கூட்டியே தேர்தலை நடாத்தும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் பதவிப் போட்டியையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என கட்சி மட்டத்தில் முன்னர் கருத்து வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment