மாவனல்லையில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் சட்டம் தன் கடமையைச் செய்யும் என தெரிவிக்கிறார் கபீர் ஹாஷிம்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவர் தொடர்பில் முழு அளவிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தான் குறித்த சம்பவங்களைக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கபீர் ஹாஷிமின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே இச்சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னர் தெரிவித்திருந்த அதேவேளை தற்போது புத்தர் சிலைகளை உடைத்தது முஸ்லிம் இளைஞர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment