தாய்லாந்துக்கு விடுமுறையில் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 30ம் திகதி நாடு திரும்பவுள்ள நிலையில் 31ம் திகதி பெரும்பாலும் தாமதமாகியுள்ள வர்த்தமானி வெளியாகும் என அரச தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சு நியமனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலான குறித்த வர்த்தமானியை வெளியிடாமலே ஜனாதிபதி விடுமுறையில் சென்றிருந்த நிலையில் அமைச்சு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
எனினும், மாத இறுதிக்குள் பிரச்சினை தீர்ந்து விடும் என ஐக்கிய தேசியக் கட்சி நம்புகின்ற அதேவேளை அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment