இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் T-56உடன் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday 9 October 2018

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் T-56உடன் கைது!


அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக கருதப்படும் ரி-56 துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்கள் அடங்கிய மகசீனுடன் இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர் ஒருவரும் சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த மாதம் 21 வயது இராணுவ சிப்பாய் ஒருவர் முகாமில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்ததன் பின்னணியில் இடம்பெற்ற விசாரணைகளிலிருந்தே அங்கிருந்து 2 ரி-56 துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளமை அறியப்பட்டதாகவும் அதில் ஒன்று ஏலவே மீட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கருதப்படும் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த காலத்தில் இடம்பெற்ற பெரும்பாலான கடத்தல்களின் பின்னணியில் இராணுவத்தினரே கைது செய்யப்பட்டும் விசாரணைக்குட்படுத்தப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment