ரஷ்யாவிடம் S-400 பெறும் இந்தியா: கோபத்தில் அமெரிக்கா! - sonakar.com

Post Top Ad

Friday 5 October 2018

ரஷ்யாவிடம் S-400 பெறும் இந்தியா: கோபத்தில் அமெரிக்கா!


ரஷ்யாவின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்பு இயந்திரமான S-400 ஒன்றைக் கொள்வனவு செய்ய இந்தியா இணங்கியுள்ளதையடுத்து கடும் விசனம் வெளியிட்டுள்ளது அமெரிக்கா. 


ஏலவே சீனாவிடம் S-400 இருக்கின்ற நிலையில், தமது வான் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இந்தியா நவீன உபகரணங்களைப் பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யா ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் நாடுகளுடன் தொடர்ந்தும் முறுகலை வளர்த்து வரும் அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராகவும் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பற்றியற் உபகரணத்தை விட S-400 பல மடங்கு சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment