ஆவா குழுவை இல்லாதொழிக்க விசேட பொலிஸ் நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 October 2018

ஆவா குழுவை இல்லாதொழிக்க விசேட பொலிஸ் நடவடிக்கை


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டு, குற்றச் செயல்களின் பின்னணியில் தொடர்பு பட்டதாக தெரிவிக்கப்படும் ஆவா குழுவை இல்லாதொழிக்க விசேட பொலிஸ் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.நீண்ட காலமாக குறித்த குழுவின் தலைவரைக் கைது செய்து விட்டதாகவும் , அடக்கி விட்டதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியிடப்படுகின்ற அதேவேளை நேற்று முன் தினம் இரவு தமது சேவை வவுனியா வரை விரிவாக்கப்பட்டுள்ளதாக ஆவா துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் 22, 23 வயதுக்குட்பட்ட, குறித்த குழுவுடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிப்பதோடு இராணுவ உதவியும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment