ஆவா குழுவுக்கு இந்தியாவில் ஆயுத பயிற்சி? - sonakar.com

Post Top Ad

Sunday, 14 October 2018

ஆவா குழுவுக்கு இந்தியாவில் ஆயுத பயிற்சி?


யாழ் பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்து வருவதாக பொலிசாரினால் தெரிவிக்கப்படும் ஆவா குழு இந்தியாவில் ஆயுத பயிற்சி பெறுவதாக புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் இவ்வாறு பயிற்சி பெறுவதாகவும் தற்சமயம் 12 பேர் அங்கு தங்கியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ யுத்தத்தின் போது உருவான அனைத்து தமிழ் ஆயுத குழுக்களும் இந்தியாவிலேயே பயிற்சி பெற்ற அதேவேளை, ஆயுதங்களும் நிதியுதவியும் வழங்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment