யாழ் ஒஸ்மானியா மாணவர்கள் கௌரவிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 11 October 2018

யாழ் ஒஸ்மானியா மாணவர்கள் கௌரவிப்பு


யாழ் ஒஸ்மானியா கல்லூரி 2018 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியெய்திய மாணவர்களை கௌரவித்தலும்  மற்றும்   4ம் 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குகும் நிகழ்வு சிறப்பாக இன்று(11) நடைபெற்றன.



 யாழ் ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில்  பாராளுமன்ற உறுப்பினர்  விஜயகலா மகேஸ்வரனின்  ஏற்பாட்டில் யாழ் மாநகரசபை உறுப்பினர் கே.எம்  நியாஸ் (நிலாம்) தலைமையில் இந்நிகழ்வு  இடம்பெற்றது.

இதன் போது அதிபர்  ஆசிரியர்  பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மேற்படி நிகழ்விற்கு தனது இம்மாத சம்பளத்தினை மாநகர சபை உறுப்பினர் வழங்கியமை சுட்டிக்காட்டத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment