வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் இளம் பெண் கடத்தல்! - sonakar.com

Post Top Ad

Tuesday 2 October 2018

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் இளம் பெண் கடத்தல்!


அம்பலந்தொட்ட பகுதி வீடொன்றுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த குழுவொன்று 17 வயது பெண்ணைக் கடத்திச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.


ஆறு பேர் கொண்ட குழுவொன்று வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி மற்றும் கத்தி கொண்டு மிரட்டி தமது புதல்வி உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் புகுந்து பலவந்தமாக கடத்திச் சென்றதாக பெண்ணின் தந்தை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment