நாமலின் சொகுசு வாகனம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு - sonakar.com

Post Top Ad

Saturday, 13 October 2018

நாமலின் சொகுசு வாகனம் உரிமையாளரிடம் ஒப்படைப்புகூட்டாட்சி அரசின் ஆரம்ப காட்டத்தில் பரபரப்பை உண்டாக்கிய நாமல் ராஜபக்சவின் சொகுசு வாகனம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.நாமல் ராஜபக்சவின் தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தின் உடாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த குறித்த வாகனம் ஹர்சன சில்வா என அறியப்படும் நபரின் குடும்பத்தினரால் கொள்வனவும் செய்யப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வந்து.

இந்நிலையிலேயே மஹிந்த அரசின் ஊழல்களை விசாரிக்கப் போவதாகக் கூறி, நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வாகனம், இரு வருடங்களுக்குப் பின் தற்போது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment