அக்குறணையில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்! - sonakar.com

Post Top Ad

Monday, 8 October 2018

அக்குறணையில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!


அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவதற்கான காரணங்களை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறி சிவில் அமைப்புக்கள் இணைந்து மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை அக்குறணை நகரில் இன்று 08 ம் திகதி நடாத்தினர். 

அக்குறணை அஸ்னா மத்திய   பள்ளி வாசலுக்கு கூடிய மக்கள்  ஊர்வலம் மூலம் அக்குறணை நகரை  அடைந்து அக்குறணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக  இவ்வார்ப்பாட்டத்தை நடாத்தினர்.


அக்குறணை நகரில்  அடிக்கடி ஏற்படும் வெள்ள பெருக்கினால் அப்பாவி மக்கள் பாதிப்படைவதாகவும் ஒரு சில அதிகாரிகள் சட்ட விரோத நிர்மாணங்களுக்கு அனுமதி வழங்குவதால் முழு அக்குறணை நகரும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிராக பிரதேச செயலகம், மற்றும் பிரதேச சபை என்பன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அரசையும் ஏனைய நிறுவனங்களையுடம் விழிப்புணர்வூட்டும் வகையில் இம்மாபெரும் ஆர்பாட்டத்தை நடாத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பெருந்தொகையான பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கண்டி மாத்தளை பிரதான பாதையில் வாகனங்கள் செல்ல முடியாது சுமார் இரண்டு மணி நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-மொஹொமட் ஆஸிக்

No comments:

Post a Comment