மின்சாரம் குறைவாக உபயோகிப்பவர்களுக்கு LED பல்ப்! - sonakar.com

Post Top Ad

Sunday 23 September 2018

மின்சாரம் குறைவாக உபயோகிப்பவர்களுக்கு LED பல்ப்!


மின்சாரம் குறைவாக உபயோகிக்கும் பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை பல்புகளை வழங்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய.


90 யுனிட்டுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்துவோருக்கே இச்சலுகை வழங்கப்படவுள்ளதாகவும் தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் எல்.ஈ.டி பல்புகளைக் கொள்வனவு செய்யும் வசதி அவர்களுக்கு இல்லாதிருப்பதாகவும் சுமார் 10 மில்லியன் பல்புகளை இவ்வாறு விநியோகிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவிக்கிறார்.

குறித்த வகை மின் குமிழ்கள் மூலம் 60 வீத மின்சாரத்தை சேமிக்க முடியும் எனவும் 20 லட்சத்துக்கு அதிகமானோர் தொடர்ந்தும் பழைய பல்புகளையே உபயோகிப்பதால் பெருந்தொகை மின்சாரம் வீணாவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment