கோத்தபாயவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸ் ஸ்னைப்பர் துப்பாக்கிகளில் ஒன்றேனும் காணாமல் போனால் அது பாரதூரமான விடயமாகும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
கோத்தா மற்றும் மைத்ரியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டும் அது தொடர்பில் அரசு இன்னும் நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், அவ்வாறு ஒரு சூழ்நிலையில் ஸ்னைப்பர் தாக்குதல்களும் எதிர்பார்க்கக் கூடியது என தெரிவிக்கிறார்.
கோத்தபாயவை முன்நிறுத்தி கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கின்ற அதேவேளை, ராஜபக்ச சகோதரர்களுக்குள் அதிகாரப் போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment