கைதான இந்தியருக்கு மனநிலை சரியில்லை: இந்திய தூதரகம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 27 September 2018

கைதான இந்தியருக்கு மனநிலை சரியில்லை: இந்திய தூதரகம்!


சர்ச்சையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி மற்றும் மஹிந்த குடும்பம் மீதான கொலை அச்சுறுத்தல் விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை 2000ம் ஆண்டு முதல் மனநிலை பாதிக்கப்பட்டவராக வாழ்ந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது இந்திய தூதரகம்.


கொலைத் திட்டம் பற்றி தகவல் வெளியிட்ட நாமல் குமாரவைத் தேடிச் சென்று பார்த்த குறித்த இந்திய பிரஜை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர் இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஊடக தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடாத்தியதாகவும் கைதான குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் இந்திய தூதரகம் விளக்கமளித்துள்ளது.

இதற்கிடையில் குறித்த நபர் மஹிந்த குடும்பம் மற்றும் மைத்ரி கொலை பற்றி குற்றப்புலனாய்வுப் பிரிவனரிடம் தகவல் சொன்னதாக வெளியான செய்தியில் உண்மையில்லையென அமைச்சர் மங்கள சமரவீர மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment