
சத்துர சேனாரத்ன 2.1 மில்லியன் ரூபா செலவில் அலரி மாளிகையில் திருமண நிகழ்வை நடாத்தியிருந்தமை பேசு பொருளானதன் பின்னணியில் எதிர்காலத்தில் எதுவித திருமண நிகழ்வையும் நடாத்த அனுமதிக்க வேண்டாம் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்துரவின் ஆடம்பர திருமணம் சர்ச்சைக்குள்ளானதையடுத்து மஹிந்த ஆட்சியில் அலரி மாளிகையில் இடம்பெற்ற திருமண நிகழ்வுகளின் படங்களும் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே ரணில் இவ்வாறு தனது தீர்மானத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment