கொலை - குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டது: மகாநாயக்கர் கவலை! - sonakar.com

Post Top Ad

Saturday 1 September 2018

கொலை - குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டது: மகாநாயக்கர் கவலை!


நாட்டில் கொலை - குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டதாகவும் அரசாங்கம் சட்ட - ஒழுங்கைப் பேணத் தவறுவதாகவும் தெரிவித்துள்ளார் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர்.செப்டம்பர் 5ம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள கூட்டு எதிர்க்கட்சி பௌத்த தலைமைப் பீடங்களின் ஆசி வேண்டி மகாநாயக்கர்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையிலேயே, கூட்டு எதிர்க்கட்சி பிரமுகர்களுடனான சந்திப்பில் வைத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமையும் ஞானசாரவுக்கு அஸ்கிரிய பீடம் பெரும் ஆதரவளித்து வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment