ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குப் பதிவு! - sonakar.com

Post Top Ad

Friday, 14 September 2018

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குப் பதிவு!


மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது பொய் சாட்சியளித்ததாக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீது வழக்குத் தொடர்ந்துள்ளது குற்றப்புலனாய்வுப் பிரிவு.மத்திய வங்கி பிணை முறி மோசடி சர்ச்சையின் பின்னணியில் தனது பதவியை இராஜினாமா செய்த ரவி கருணாநாயக்க, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 2ம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியளித்திருந்தார்.

இந்நிலையில், அப்போது பொய் கூறியதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். வழக்கு விசாரணை செப்டம்பர் 28 இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment