அமித் வீரசிங்க குழுவின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 21 September 2018

அமித் வீரசிங்க குழுவின் விளக்கமறியல் நீடிப்பு!கடந்த மார்ச் மாதம் கண்டி, தெல்தெனிய - திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை நடாத்திய மகசோன் பலகாய இனவாத அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட சகாக்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இன்று இடம்பெற்ற விசாரணையின் பின் அமித் உட்பட எண்மருடைய விளக்கமறியலை எதிர்வரும் ஒக்டோபர் 5ம் திகதி வரை நீடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தமக்கு ஆதரவளித்த பொலிசார் பின் கைது செய்ததாகவும் பொலிசார் கொந்தராத்துக்கு வேலை செய்வதாகவும் அமித் முன்னர் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment